Blogger news

இன்றைய குறள்

பழமொழி

Blogger templates

Wednesday, November 30, 2011

சகோதரி தர்ஷினியின் ஸ்கைப் நிலை

"Its really hard to live without mother". எனக்கு வருத்தமளித்தது.

அதன் வெளிப்பாடு இது!!!!


அன்பு அம்மா,

கண்ணின் இமைபோல்
என்னை காத்தவளே,
நீயில்லாத என் வானம்
நிலவில்லாத அமாவாசை தான்!!

சோதனைகள் பலவந்தும்
என்னை காத்தவளே,
நீ இல்லாத வாழ்க்கை
எனக்கு சோதனையாச்சே!!

என் கரம் பற்றியே
எங்கும் செல்பவளே,
இன்று என்னை
மட்டும் தவிக்கவிட்டாயே!!

அருகில் நீ இருக்கும்
பொழுது புரிந்துகொள்ளவில்லை,
நீ இல்லாத பொழுது
வாழ்க்கையே புரிந்தது!!

என்னை ஈன்றவளே,
உன் நிழலினும்
பாதுகாப்பு வேறில்லை.

Tuesday, November 29, 2011

மின்வெட்டு

தமிழகத்தில் நடக்கும்
ஆட்சி,
விண்ணிலும் நடக்கிறதோ!
அங்கும் மின்வெட்டு.



"அம்மா"வாசை.

என்னை கவர்ந்த அன்பு தம்பியே..

அன்பு தம்பி,

உடல் நிலையில் சிறு பிரச்சனை
என்று கூறினாய்.
காலில் உள்ள ரணம் சீக்கிரம்
குணமாகிவிடும் என்று கூறினாய்.
ஆனால் இத்தனை நாட்களா?

எல்லா நட்பையும் உதறினாய்.
அந்த வட்டத்தினுள் என்னையும்
இணைத்துவிட்டாயோ??

நிறைய யுத்திகள் கொடுத்து
என்னை சிந்தித்து
பதிவு செய்ய வைத்த தம்பி,
எங்கேயடா மறைந்திருக்கிறாய்?

நாம் செய்த கலந்துரையாடல்கள்
இன்னமும் என் இதயக்கூட்டில் பத்திரமாக
இருக்கிறது.
அதை நீ மறந்துவிட்டாயோ?
அல்லது ஒளிந்துகொண்டாயா??

மனநிறைவோடு முகமலர்ச்சியோடு
அண்ணா அண்ணா என்று
அழைப்பாயே,
என் ஈழத்து இளம்புலியே
எங்கேயடா சென்றாய்.

ஒரு வேலை இதை நீ காண
நேர்ந்தால் ஒரு
மின்னஞ்சலாவது அனுப்புவாய்
என்று நம்பிக்கையுடன் பதிக்கிறேன்.

Monday, November 28, 2011

சிறப்பாக திரும்புக

என் முகமரிந்த சகோதரியே,

இணையதள அரட்டையில் சந்தித்தோம்.
நண்பா என்று அழைத்து,
எனக்கில்லை அண்ணன்,
உங்களை அண்ணா என்று
அழைக்கவா என்ற கேள்வி உங்களிடமிருந்து.
சரி இருக்கும் நிறைய சகோதரிகளோடு
நீங்களும் ஒருவர் என்று நினைத்து
பழகினேன்.

நான் தெளிவற்ற நிலையில் இருக்கும் பொழுது
எனக்கு புது சிந்தனைகளை கொடுத்தீர்கள்.

என் பதிப்புக்களை படித்ததோடு
மட்டுமில்லாமல்,
விமர்சனம் செய்து
கருத்துக்கள் கூறி
ஊக்கமும் கொடுத்தீர்கள்.

சகோதரிகள் பலர் என்னிடம் அறிவுரை
கேட்டிருந்த பொழுது,
எனக்கு அறிவுரை கூறி தனித்திருந்தீர்கள்.

பல மாதங்கள் தொடர்பற்று போனது.
மினஞ்சல்களுக்கும் பதிலில்லை.

இன்று திடிரென்று சுவாசிக்க சிரமப்பட்டேன்,
என் வலது மார்பு வலியினால்.
அதை விட மாலை அதிக வலி
உங்களுக்கு சுகவீனம் கேள்விப்பட்டபொழுது.
ஒரு வேலை இது தான் மிகுந்த பாசமோ!

நெஞ்சம் பதபதைதுப்போனது.
துக்கப்பட்டேன்.
இடிந்துபோனேன்.
கண்களும் மெல்லியதாக கலங்கித்தான் போனது.
பேச வார்த்தையில்லாமல் சிறிய மௌனம்.

உங்கள் மனவலிமை,
உங்களை குணப்படுத்தி,
அதே
பழைய பொலிவுடன்,
மனஉறுதியுடனும்,
சிறப்பாக திரும்ப
சேர்க்கும் என்ற நம்பிக்கையுடன்

உங்கள் முகமறியா
அன்பு அண்ணன்

Saturday, November 26, 2011

விதைந்து இருக்கும் வீரம்




இந்த பாடலை எனக்கு பாடி கொடுத்த அன்பு தோழர் BTC "கோகுல்" அவர்களுக்கும், இதை காணொளியாக மாற்றி அருமையாக அதை தொகுத்து கொடுத்த அன்பு தோழர் BTC "சுரேந்தர்" அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்.

இந்த பாடலின் பாடல் வரிகள், கீழே இருக்கும் இணைப்பில் இருக்கிறது.

http://lkarthikeyan.blogspot.com/2011/11/blog-post_05.html

Friday, November 25, 2011

கனவு மெய் பட வேண்டும்




உள்ளம் குமுருதே, வலியிருக்குதே
நெஞ்சில் தைத்த ரணங்களில்
குருதி வடியுதே.

பதபதைக்குதே, பழி தீர்க்க துடிக்குதே
என் பள்ளிகளின் சுவடு
அழிந்ததே.

மனம் துடிக்குதே, உள்ளம் அழுகுதே
மருத்துவமனையின் மண்ணில்
இரத்தம் தோய்ந்ததே.

பாதை மறைந்ததே, இதயம் கிழீந்ததே
பயின்ற பாசறைகள்
பாழடைந்து போனதே.

குற்றம் பெருகுதே, குழந்தை கதருதே
பெண்களின் கருவும்
கலைக்கப்படுதே.

உடல் சிதைந்ததே, உயிர்கள் பிரிந்ததே
உறவுகள் கண்முன்னே
கலங்கிபோனதே

ஆறாத வடுக்களே, ஆடிய விழுதுகளே
நீரோடும் ஆற்றில் குருதி
கலந்ததே.

கரம் இணையுதே, வலு கூடுதே
தமிழ் மனம் எங்கும்
வீசுதே.

துவண்ட உறவுகளே, ஒளி பிறக்குதே
தமிழீழ தாகம் எங்கும்
பரவுதே.

நெஞ்சு நிமிருதே, உரக்க ஒலிக்குதே
புலிக்கொடி பாரில்
பட்டோளிவீசுதே.

கனவு பலித்ததே, காற்று வீசுதே
சுதந்திர பூமியில் கால்
பதிந்ததே.

Thursday, November 24, 2011

வேர்



நம்முடைய இனத்தின்
பழமையையும்,
பெருமையையும்,
மொழியின் வளமையையும்,
பின் வரும்
தலைமுறைக்கு
புகுத்தி
விதைக்கவேண்டும்.
அப்பொழுது தான்
வேராக ஆழ பதிந்து
மரமாகி நிறைய
பேருக்கு நிழல் தரும்.
பூவாக பூத்து
காயாக காய்த்து
கனிந்து பலம் தரும்.
நம் பெருமை புரியாத
நம்
மக்களுக்கும் எடுத்துரைக்கும்.

நான் தமிழனாக பிறந்தது பெருமை. என் கடமையுள் இதுவும் ஒன்று.

ஆலமரத்தின் விழுது ஒரு நாள்
வேராகி அதே மரத்திற்கு உதவுகிறது.

கருகிய மொட்டுக்கள்




காலை
பள்ளிக்கு கிளம்பிய
மொட்டுக்கள்,
மலரும் முன்னே
கருகிவிட்டது.



செஞ்சோலை படுகொலை.

Wednesday, November 23, 2011

அன்பு நண்பர் துபாய் சூரியாவின் பிறந்த நாள்

இணையத்தளத்தில்
என்னை தொலைத்தேன்
என்று நினைத்த பொழுது
அருமையான நண்பர்களை
எனக்கு வழங்கியதோடு
மட்டுமல்லாமல்,
என் தாய் மொழிக்கு
சிறப்பு
வழங்கிய
BTC துபாய் சூரியா அவர்களுக்கு
மனமார்ந்த
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
உங்கள் பணி மென்மேலும்
மெருகேற வாழ்த்துக்கள்

http://tamilsingers.com/index.php

வாழ்க்கை


கடலினுள் வாழ்வை
தேடி
வலையினுள்
வாழ்வை தொலைத்த
மீனவர்களின்
கண்ணீர்,
அலைகளாய் வீசுகிறது



கடற்கரையில்!!!!!

சிதறும் கவனம்

இடையை பார்த்து
இடைவெளியை மறந்து
இடித்து நின்றேன்.



விபத்து!!!!!!!!!!

Tuesday, November 22, 2011

மாற்று மொழி


ஈன்ற தாய் சுகமோடும்,
வளமோடும்,
இருக்கும் பொழுது,
செவிலித்தாய்
தன் குழந்தைக்கு
அமுதுட்டுவது
போல் கொடுமையானது,

தாய் மொழியை உதறி
வேறு மொழியின் மீது நாட்டம் செலுத்துவது.........

மாற்று மொழி தமிழர்களுக்கு தமிழர்களிடம் தேவையா??

Monday, November 21, 2011

விந்தை



நெருப்பில்லாமல் புகையாது
என்பார்கள்.





பனிக்கட்டியில் புகை.
நெருப்பிலாமல்!

பாவம்

எங்கோ நடந்த
தவறால்
குப்பை தொட்டியில்
முகம் பதிக்கிறது




பிச்சிளம் பிள்ளை!

Sunday, November 20, 2011

வசூல் வேட்டை


மக்கள் வரிப்பணத்தில்
அமைத்த
நெடுஞ்சாலையில்,
அம்மக்களிடமே
வரி வேட்டை நடத்துகிறது




சுங்கச்சாவடி!!!!!

Saturday, November 19, 2011

தோழர் ராஜேஷின் காதல் வாழ்க்கை


அந்த இனம்புரியா வயதில்
என் அரும்பு மீசை எட்டி பார்க்க துடிக்க,
என் இதயவானில் ஒரு மின்னல் கீற்று!
உற்றுப்பார்த்தேன்.
என்னுள் ஒரு சங்கீத ஒலி!
அந்த ரம்யமான இசை எனக்குள்
சிறகுகள் முளைத்தது போல்
ஒரு எண்ணம்.
கால்கள் பூமியை மறந்தது போல்
ஒரு எண்ணம்
என்னை எங்கோ பறக்க செய்த்தது.
தொலைத்த பாதையில் திசை
காட்டும் ஒளியாய் நீ நின்றாய்.

அந்த கண்களின் ஒளியில் நான் என்னை உணர்ந்தேன்!
அன்பால் என் அன்னையையும், பண்பால் என் தந்தையையும்
ஞாபகப்படுத்தியது.

சரியா தவறா என்று தெரியவில்லை? ஆனால்
அது எனக்கு பிடித்துப்போனது.

எனக்கு மிகவும் பிடித்த என் தாய் மொழியின்
முதல் எழுத்து "அ" உன் பெயரின்
முதல் எழுத்து.
அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
என் அன்னையின் அன்புக்கு பிறகு
நீ தான் என்ற ஒரு உணர்வு இன்றும்
என் ஆழ்மனதில் இருக்கிறது.

ஆண்டுகள் பல கடந்தாலும்,
நாடுகள் பல சென்றாலும்,
பல்சுவை பல சுவைத்தாலும்,
அன்பினாலான
உன் ஒரு பிடி சோற்றிற்கு ஈடாகவில்லை.
பல உண்மைகளை உன்னிடம் மறைத்தாலும்
என்னென்றும் எனக்காக நீ என்பதை மட்டும்
உறக்கக்கூறுகிறது உள்மனது.

என்னை நெஞ்சில் சுமந்து
என் உயிரை உன்னுள் சுமந்த
நீயும் என் தாய் தான்.

Thursday, November 17, 2011

தவிக்கும் தணல்


கொடுமைகளை கண்ட
ஒவ்வொருவரின் மனதிலும்
கொதித்தெழுந்து
பூக்கும் தணல்,
ஒருங்கிணைந்து
கட்டங்காமல்
காற்றாற்று
வெள்ளமாய் தறிகெட்டு
ஓடி,
கடலுக்குள் அடங்கிவிடுவதற்குள்,
அவற்றை
நல்வழிப்படுத்தி
ஒளியூட்டும்
விளக்குகளாய்
மாற்றுங்கள்.

இங்கேயும் ஒரு தவிக்கும் தணல்.

Wednesday, November 16, 2011

எதிர்பார்ப்பு


பாதை ஒளிரும்
என்ற
எதிர்ப்பார்ப்பில்,
சோகக்கடலில்
கலங்கரை விளக்கத்தின்
ஒளியை நோக்கி.





இருண்ட விழிகளோடு!

சோகம்




பசியறியா பந்திக்கு
வெளியே
எச்சில் இலைக்காக,




ஒட்டிய வயிறு!!!!



நமக்கு கிடைத்த உணவை வீணாக்காதீர்கள். நாம் வீணாக்கும் உணவு கூட கிடைக்காமல் உலகத்தில் எத்தனையோ மனிதர்கள் இருக்கின்றார்கள்.

Tuesday, November 15, 2011

உண்மைதானே??

தன்னை
சரியாக கையாளுபவர்களுக்கு
வாழக்கை தழைக்கிறது
என்று
உரைக்கிறது,



உணர்ச்சி!

கட்டுப்பாடு

நமக்கு நாமே
போட்டு கொள்ளும்
வேலி.




சத்தியம் செய்வது!

நகைச்சுவை சித்திரம்

Monday, November 14, 2011

Japanese Psychology


the 4th letter of your name shows ur character-

A: Gifted
B: Loved by all
C: Innocent
D: Talented
E: Good but hurts
F: Feel for others
G: Logical thinking
H: Calm
I: Respected
J: Enjoy life
K: Lovable
L: Funny
M: Great person
N: Proud
O: Sportive
P: Smiling
Q: Cool
R: Unpredicta ble
S: Caring
T: Genuine
U: Practical & Genius
V: Angry
W: Take it easy
X: Intelligen t
Y: Enjoyable
Z: Jovial

Whats yours??


This one is a post in FB. I copied and pasted here....Thanks

கசக்கும் இனிப்பு

உயிர் பயத்தால்
சக்கரையும் கசக்கும்
உனக்கு!



நோய் வந்த பிறகு.

Friday, November 11, 2011

கோலம்

மழைக்காலத்தில்
வாகனங்களின்
ரங்கோலி,



என் ஆடையினில்.

Thursday, November 10, 2011

பேசும் விரல்கள்


உதடுகள் மௌனித்திருந்தாலும்
உரக்க பேசுகின்றது
விரல்கள்!


சைகை

Find your number in world



http://www.bbc.co.uk/news/world-15391515

Wednesday, November 9, 2011

சேவை


யார் என்ன பேசினாலும்
தன்னுள்
வாங்கிக்கொண்டு
தன்
சேவையை
தொடர்கிறது.




ஒலிவாங்கி!

Monday, November 7, 2011

திக்கு தெரியாத கடலில் திசை தேடும் துடுப்புகள்


துடுப்புகள் துழையவே, எங்கள் தோனியின் ஓட்டமே,
அலைகளின் நடுவிலே, இது என்ன வெற்றியா? தோல்வியா?
உப்பு நீரிலும்; ஊதக்காற்றில்லும்
அல்லல்படுகிறோம்; இது விதியோ சாபமோ?

கடல் அன்னையை தீண்டும்போதும், கைகூப்பும் எங்கள் கைகள்
ஒருமுறை கரையை மீண்டும் திரும்பி பார்க்க வைக்கிறது.
குடும்பத்தினரை பார்த்துவிட்டு, விழியோரம் நீர் தெளித்து
அந்த சோக கண்களை காண்போமா? என்று உள்ளம் கேட்கிறது

அமைதியான வாழ்க்கைக்காக, இரைச்சலான கடலில்
வாழ்க்கையின் ஆதாரத்தை தேடுகிறோம்
வலையை கடலில் வீசினாலும், எங்கள் குழந்தைகளின்
நாட்டம் நட்ச்சத்திர மீன்கள் மீது தான்.
கவுச்சி வாடை எங்கள் மேல் வீசினாலும்
எங்கள் மனம் கலங்கப்பட்டதில்லை

புயலில் அல்லல்படுவது எங்களுக்கு
பழகி தான் போனது.
சில சமயங்களில் ஆழிப்பேரலை
எங்களை சுழற்றி போடுகிறது.
பணி சென்ற துணைவர் திரும்பிவர
எங்கள் பெண்களின் வேண்டுதல்,
தந்தையின் வரவுக்காக வாடியிருக்கும்
பிள்ளைகளின் சோக கண்கள்,
மனதிலேயே நிற்கும்.

வலைகளுக்கும் கட்டுப்பாடு உண்டு சில காலங்களில்.
விதிகளை மீறாமல் எடுத்து செல்வோம்.
மீன் வளப்பகுதியை தேடிசென்று வீசுவோம்.
வலைகளை உலர்த்த ஒப்பந்தம் கச்சத்தீவில்.
வாக்குறுதியை மீறி வலையருக்கும்
அண்டை நாட்டு இராணுவம்,
இப்பொழுது எங்கள் எல்லையினுள்ளே
எங்களை தாக்குகிறது.

உப்புக்காற்றிலும் உடல்வலியை பொருத்து
வலையிழுக்கும் எங்களை
கடலிலே கழுதருக்கிறது,
சுட்டு வீழ்த்துகிறது.
அஞ்சியவர்கள் மீன்களை கொடுக்கிறோம்
எதிர்ப்பவர்கள் தங்களை தொலைக்கிறனர்

குட்ட குட்ட குனிந்தோம்,
அடிக்க அடிக்க அஞ்சினோம்,
உழைப்பை வீனடித்தோம்,
உயிரை மாய்த்தோம்.
உயிர் வாழ, குடும்பத்தை காக்க
பல்லுக்கு பல்
கண்ணுக்கு கண் என
மனதில் உறுதிகொண்டு,
நாளைய பொழுதின்
விடியலை பார்த்திட,
ஆயுதம் ஏந்தினோம்.
நாங்களும் வாழவேண்டும் அல்லவா!

திக்கு தெரியாத கடலில் திசை தேடும் துடுப்புகள் நாங்கள் தமிழக மீனவர்கள்

கண்ணீர் ஓலைகள் கடலுக்கு


கடல் அன்னையே,

எங்கள் வாழ்க்கைக்கு தேவையான
உணவு பொருள்களை
வாரி தரும் வள்ளல் நீ.

கோபப்படும் வேளையில்
புயலாகவும், ஆழிப்பேரலையாகவும்
அவ்வப்பொழுது எங்களை
சோதித்து செல்கிறாய்.

நாங்கள் செய்கின்ற
பூஜைகள் கோபத்தை தணிக்கும்
என்ற நம்பிக்கையில்
இயன்றவற்றை செய்கின்றோம்.

நாங்கள் உன்னுள் நுழையும் பொழுது
திரும்பி வருவோம் என்ற நம்பிக்கையில்
எங்கள் குடும்பம். ஆனால்
எங்கள் சடலங்கள் உன்னுள்ளே
அடக்கமாகின்றன.

சிங்கள காடையர்கள் குலைக்கின்றனர்
எங்கள் நம்பிக்கையை.
நிலத்தில் புதையாமல்
தண்ணீரில் புதைந்து போகிறோம்.

காப்பாற்ற யாருமில்லை,
உன்னை நம்பி உள்ளே வந்தோம்,
சடலமாகி திரும்புகிறோம்.

இனி காந்திய வழி வேண்டாம் எங்களுக்கு,
குட்ட குட்ட குனிந்து சென்றது போதும்,
வேறு வழியில்லை என்ற எண்ணத்தில்
நிமிர்கிறோம்,
எங்கள் பிள்ளைகளாவது பிழைக்கட்டுமே!

பிரபாகரனின் உறவினர்கள்
என்று தாக்குத்தல்,
எங்கள் தம்பி பிரபாகரனின்
வழியில் நாங்களும்
ஆயுதம் ஏந்த
எண்ணுகிறோம்.

இனி
துடுப்போடு எங்களிடம்
துப்பாக்கியும் இருக்கும்.
நாங்கள் ஜலசமாதியானது போதும்,
இனி எதிரிகளின் பிணங்கள்
உன்னிலே.

அவர்களின் இரத்தம்
உன் மீது தெளிப்பதற்கு
நாங்கள் ஆளாக இருப்பதால்
மன்னித்து ஆசிர்வாதம் செய்.

வீரியம்

என் வியர்வை
துளிகளுக்கு
அவ்வளவு வீரியமா?
சுரண்டியுன்னும் முதலாளிக்கு
விரைவாக வளர்கிறது



தொப்பை.......

Saturday, November 5, 2011

ஒருங்கினைவோம்....


படம் - ரௌத்திரம்
பாடல் - மாலை மங்கும் நேரம்

இதை படிக்கும் நண்பர்கள் தயவு செய்து "ரௌத்திரம்" படத்தில் இடம் பெற்றுள்ள "மாலை மங்கும் நேரம்" பாடலை கேட்டுக்கொண்டே படியுங்கள்.




பாதை போகும் தூரம், என் கால்கள் நில்லா ஓடும்
வெற்றியிலக்கை அடையும் வரையில், அது நில்லாமல் ஓடும்
தடைக்கள் வந்தால் என்ன, வெட்டி பேச்சுகள் வந்தால் என்ன
வெற்றி இலக்கு மட்டும்தானே, மனதில் என்றும் நிற்கும்


துரோகம் என்றும் வென்றதில்லை இல்லையே,
வேரோடு அழித்து வெற்றியடைவோம்.
உறக்கம் கண்ணை அண்டுவதில்லை இல்லையே,
லட்சியம் ஈட்டும்வரை விழித்தேயிருப்போம்.

பாதை போகும் தூரம் என் கால்கள் நில்லா ஓடும்
வெற்றியிலக்கை அடையும் வரையில் அது நில்லாமல் ஓடும்

வீரத்திலே குறைவில்லை, பயிற்சியிலே நிறைவாக
எதிரிகளின் படையினரை ஓட செய்திடுவோம்.
வீழ்ந்தாலும் விதையாவோம்; மடிந்தாலும் உயிர்த்தெழுவோம்
என் வீரமா உன் வீரமா மோதி பார்த்திடுவோம்.
ஆயுதத்தை நாங்கள் தானாக எடுக்கவில்லை,
ஏந்த செய்தது நீங்கள் தானே!
அதற்கு பரிசு காத்திருக்கு உங்களுக்கு,
தோல்வி பயத்தில் மண்டியிடுங்கள்.

பாதை போகும் தூரம், என் கால்கள் நில்லா ஓடும்
வெற்றியிலக்கை அடையும் வரையில், அது நில்லாமல் ஓடும்

நமது பூமியே தாயாக, நினைத்து நாம் வாழ்திருந்தோம்
வேறொருவன் கைபற்ற பார்க்கலாகுமா
ஊரெங்கும் குண்டுவெடிப்பு; தாய் தந்தை உயிரிழப்பு
சாலைகளிலே இரத்த ஆறு வற்றவேயில்லை
மாணவர்கள் பள்ளியினுள்ளே நுழையவில்லை
குண்டு அடித்து மாண்டுபோனார்!
கர்ப்பிணிகள் சேர்க்கப்பட்ட மருத்துவமனையும்
கருகி கருவை அழித்துபோனது!

பாதை போகும் தூரம் என் கால்கள் நில்லா ஓடும்
வெற்றியிலக்கை அடையும் வரையில் அது நில்லாமல் ஓடும்
தடைக்கள் வந்தால் என்ன,வெட்டி பேச்சுகள் வந்தால் என்ன
வெற்றி இலக்கு மட்டும்தானே மனதில் என்றும் நிற்கும்

பாடலாய் கேட்க இங்கே சொடுக்குங்கள் கேட்க

நன்றி

Friday, November 4, 2011

விபத்தின் வலி

நம் கண்கள்
மோதிக்கொண்ட
விபத்தால்
காயம்பட்டத்து
என்னமோ
என்னுடைய
இதயத்திற்கு தான்.



வலியாக உன் நினைவுகள்.

Thursday, November 3, 2011

இதய வங்கி (வட்டியும் உண்டு)


உன் நினைவுகளை
சேமிப்பதால்,
என் இதயமும்
"வங்கி" தான்




வட்டியாக கனவுகள்.

Wednesday, November 2, 2011

துயிலும் இல்லங்கள்


தமிழ் மண்ணும்
கருவறை தான்.





மாவீரர்கள் விதைக்கப்படுவதால்!

ஆரோக்கியத்திற்கு குறைவில்லாத மூலிகை


Herbal Tea
காலையில் எழும்போதே காபி, அல்லது டீயின் முகத்தில் விழிப்பவர்கள்தான் அதிக அளவில் உள்ளனர். காபியோ, டீயோ எதுவென்றாலும் இன்றைக்கு சுத்தமானதாக இருப்பதில்லை. காசு செலவாவதோடு கலப்படத் தூளினை காய்ச்சி குடிப்பதால் உடல்நலம்தான் சீர்கேடு அடைகிறது. எனவே இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட மூலிகை பானங்களை பருகினால் ஆரோக்கியமாக வாழலாம் என்று அறிவுறுத்தியுள்ளனர் இயற்கை ஆர்வலர்கள். பால் கலக்கத் தேவையில்லாத இந்த பானத்தை தயாரித்துக் குடிப்பதால் உடலுக்கு நன்மை ஏற்படுவதுடன் செலவையும் குறைக்கலாம்.

செம்பருத்திப்பூ

மூன்று செம்பருத்திப் பூக்களின் இதழ்களை மட்டும் பிரித்தெடுத்து நீரில் போட்டுக் கொதிக்க வைத்து டிகாசன் போல வடிகட்டி எடுக்கவும். அதனுடன் எலுமிச்சைப் பழச்சாறு, தேன் கலந்து டீயாகச் சுவைக்கலாம் இது இதயநோயை தடுக்கும். தொடர்ந்து நாற்பது நாட்கள் பருகிவர இதயம் வலிமை பெறும். படபடப்பு வலி, மாரடைப்பு ஏற்படாது.

ஆவாரம்பூ

காம்பு நீக்கிய ஆவாரம்பூக்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சை பழச்சாறு வெல்லம் கலந்து வாரம் ஒரு முறை சாப்பிடலாம். இது உடலின் வெப்பத்தை தணிக்கும். இது பித்தப்பையில் உள்ள கல்லை நீக்கும். நீரிழிவை குணமாக்கும்.

மாம்பூ

மாம்பூ, மாந்தளிர் இரண்டையும் நீரில் போட்டு கொதிக்கவைத்து தேன் கலந்து இளம் சூட்டில் பருகிவர பல்வலி குணமடையும்.

நூறு கிராம் மாம்பூக்கள் எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு காய்ச்சி அடுப்பில் சுண்ட வைத்து காலை மாலை பருகிவர சீதபேதி குணமாகும்.

துளசி இலை

சில துளசி இலைகளை பறித்து நீரில் கொதிக்க வைத்து வெல்லம், ஏலக்காய் சேர்த்தால் துளசி இலை டீ ரெடி. இது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும். சளி, கபம் போக்கும்.

கொத்தமல்லி தழை

கொத்தமல்லித் தழையைச் சிறிதளவு நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சுக்குத்தூள் வெல்லம் கலந்து பருகவேண்டும். சுவையான இந்த சுக்கு மல்லி காபி பித்தம் தொடர்பான நோயை போக்கும்

புதினா இலை

புதினா இலைகளை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் சேர்த்து குடிக்கலாம். இது அஜீரணத்தை அகற்றும். வயிற்றுப்போக்கை நிறுத்தும், சீதபேதிக்கு நல்ல பலன் கொடுக்கும். மாதவிடாய்த் தடங்கல்களை நிவர்த்தி செய்யும். சிறுநீர்த்தடைகளை நீக்கும். அகட்டு வாய்வை நீக்கும். பித்தம் தொடர்பான நோய்கள் அகலும். குடற்கிருமிகளை அழித்து வெளியேற்றும். ரத்தம் சுத்தியாகும். ரத்தக்குழாய்கள் பலமடையும். ரத்த உற்பத்தி அதிகரிக்கும்

கொய்யா இலை

கொய்யா இலைகளை நீரில் கொதிக்க வைத்து ஏலக்காய், வெல்லம் சேர்க்க வேண்டும். இது குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சலை கட்டுப்படுத்தும். கடுமையான இருமலால் அவதிப்படுபவர்கள் கொய்யா இலைகளை கொதிக்க வைத்து அதனுடன் தேன் கலந்து பருகிவர இருமல் கட்டுப்படும், காய்ச்சல் குறையும்.

நன்றி:- தட்ஸ் தமிழ்

Tuesday, November 1, 2011

பொக்கிஷம்.



கண்ணீரை காகிதத்தில்
வடித்துவிட்டு
குப்பைத்தொட்டியில்
பேனா.

காகிதங்கள்
மட்டும் பொக்கிஷமாகி
பத்திரமாய் இருக்கின்றன.

நிரம்பிய சாலை!




வாகனங்களின் இரைச்சல்கள்

நடுவே,

மனிதர்களின் தேடுதல்

பயணம்.

7ஆம் அறிவு சீன பாடல் வரிகள்